12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா வைரஸ் பாதிப்பால் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்த மத்திய அரசு, பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமலேயே இருந்தது. இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மாணவர்களின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதால் அதற்கான அவகாசத்தை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கால அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்த வேண்டிய மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், திடீர் உடல்நலக்குறைவால் இன்று பிற்பகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரால் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக இன்று மாலை பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தவுள்ளார். மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு பதிலாக பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، يونيو 01، 2021
Comments:0
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை..!
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.