தமிழகத்தில் 11ம் வகுப்பு சேர்க்கையின் போது விருப்பமான பாடப்பிரிவுகளை வழங்குவதற்கும், ஆங்கில வழி வகுப்புகளில் இடம் தரவும், அரசு பள்ளிகளில் கட்டாய நன்கொடை வசூலிப்பதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமெடுத்து வரும் காரணத்தால் புதிய கல்வியாண்டு தொடங்கிய போதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் போன்கள் வாங்க முடியாத அரசு பள்ளி மாணவர்களுக்காக அரசு கல்வி தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தினதோறும் தடையில்லாமல் கல்வி கற்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய வகுப்புகளுக்கான அரசின் விலையில்லா பாட நூல்களும் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக 10, 11,12 ஆகிய வகுப்புகளின் பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு சேர்க்கைக்கு நன்கொடை வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை படிவத்திற்கு கட்டணம் வசூலிக்க கூடாது. மேலும் சிறப்பு கட்டணங்கள் எதுவும் வசூலிக்க கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். இதை மீறி பிளஸ் 1ல் மாணவர்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை வழங்குவதற்கும், ஆங்கில வழி வகுப்புகளில் இடம் தரவும், அரசு பள்ளிகளில் கட்டாய நன்கொடை வசூலிப்பதாகவும், அதை தங்களால் செலுத்த முடியவில்லை எனவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.