சட்டமன்ற உறுப்பினர்களை தவிர்த்து தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சி அலுவலகம் வர வேண்டாம் - அதிமுக தலைமைக் கழக அறிவிப்பு - தேதி: 10.6.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يونيو 10، 2021

Comments:0

சட்டமன்ற உறுப்பினர்களை தவிர்த்து தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சி அலுவலகம் வர வேண்டாம் - அதிமுக தலைமைக் கழக அறிவிப்பு - தேதி: 10.6.2021

தேதி: 10.6.2021
தலைமைக் கழக அறிவிப்பு
கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 14.06.2021 திங்கட் கிழமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 14.06.2021 திங்கட் கிழமை நண்பகல் 12.00 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில், கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அளைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், MLA ID Card உடன் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 14.06.2021 அன்று தலைமைக் கழகத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மட்டுமே நடைபெற இருப்பதால், கொரோனோ பெருந்தொற்றின் காரணமாக அன்றைய தினம் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தலைமைக் கழகத்திற்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு; தலைமைக் கழக வளாகத்திற்குள் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة