தமிழகத்தில் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது வரம்பை 57 ஆக நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பணி வயது வரம்பு:
பள்ளி ஆசிரியர்களுக்கான பணி வயது வரம்பை 57 ஆக நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தற்போது கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு.தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கான வயது வரம்பு 57 என்று இருந்தது.
இதனால் ஆசிரியர் பயிற்சி மற்றும் பட்டப்படிப்பு முடித்து ஆசிரியர் வேலைக்காக காத்திருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் கடும் வேதனைக்கு ஆளாகியிருக்கிறார்கள். முன்னதாகவே இது குறித்து தேர்தல் அறிக்கை குழுவிடமும் நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம். ஆகவே மதிப்புமிகு மாநில முதல்வர் அவர்கள், முன்பு இருந்ததை போலவே ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது வரம்பை மாற்றியமைக்க வேண்டும்.
ஆகவே அவர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் அளித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை குழுவிடமும் இது குறித்து கோரிக்கை வைத்துள்ளோம். ஆகவே எங்கள் கோரிக்கையை தேர்தல் வாக்குறுதியாக கருதி ஒரு நல்ல முடிவை வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்’ என கூறப்பட்டிருந்தது.
بحث هذه المدونة الإلكترونية
الأربعاء، مايو 12، 2021
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
2012 Tet 82 Marks considered pannuga Cm sir pls reqested
ردحذف