தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், அவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
மதிப்பெண் கணக்கீடு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது சிரமம் என்பதால் முந்தைய எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை ரத்து செய்தது. ஆனால் மதிப்பெண்கள் கணக்கீடு தொடர்பாக அறிவிப்பு வெளியிடவில்லை. மேலும் கடந்த கல்வியாண்டில் அரையாண்டு, காலாண்டு மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான வாய்ப்பில்லை என்பதால் புதிய வழிமுறையையே கையாள வேண்டி உள்ளது. இது தொடர்பாக புதிதாக பதவியேற்று உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அதில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 10ம் வகுப்பிற்கான மதிப்பீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அவர்கள் கூறியதாவது, தற்போது உள்ள சூழலில் மாணவர்களின் நலனே அரசுக்கு முக்கியம். பிற மாநிலங்களில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியது குறித்தான விபரங்களை கேட்டறியுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் எனவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.