SSC தேர்வுகள் 2021 ஒத்திவைப்பு - SSC Exam Postponed 2021 Download PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، مايو 07، 2021

Comments:0

SSC தேர்வுகள் 2021 ஒத்திவைப்பு - SSC Exam Postponed 2021 Download PDF

அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது (SSC) தற்போது பல்வேறு தேர்வுகளை ஒத்திவைப்பதாக புதிய அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSC
பிரிவின் பெயர் CHSL, CGL, CAPF
தேர்வு தேதி May-21
தேர்வு ஒத்திவைப்பு அறிவிப்பு Download Below
SSC தேர்வுகள் 2021 :
SSC தேர்வாணையம் ஆனது Combined Higher Secondary (10+2) Level (Tier-I) தேர்வுகளை வரும் 21.05.2021 மற்றும் 22.05.2021 ஆகிய தேதிகளிலும், Combined Graduate Level (Tier-I) Examination தேர்வுகளை வரும் 29.05.2021 முதல் 07.06.2021 வரையிலும் நடத்த திட்டமிட்டு இருந்தது. மேலும் Constable (GD) in CAPFs, NIA, SSF & Rifleman (GD) in Assam Rifles Examination பணிகளுக்கு மே முதல் வாரத்திலும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக முன்னதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவி வருவதனால் இத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக SSC தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இத்தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒத்திவைப்பு குறித்த மேலும் தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.
SSC Exam Postponed 2021 PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة