கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய ஆன்லைன் தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்த முடியாமல் போனதால், 2 வார ஊரடங்கு காலத்தில் தேர்வுகளை நடத்தி முடிக்க கல்லூரிகள் திட்டமிட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தவிர மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் காரணமாக மாநிலம் முழுவதும் 2 வாரங்களுக்கு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 வார ஊரடங்கு காலத்தில் சென்னையில் உள்ள சில கல்லூரிகளில், மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிப்பட்டுள்ளது.
அதாவது பல கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வுகளை மே முதல் வாரத்தில் நடத்தி முடிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டுமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இடைப்பட்ட காலங்களுக்குள்ளாக தேர்வுகளை நடத்தி முடிக்க கல்லூரி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. முன்னதாக கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ள தேர்வுகளின் எண்ணிக்கை மற்றும் நடத்தப்படவுள்ள தேர்வுகள் குறித்து விளக்கம் அளிக்கும்படி அனைத்து கல்லூரிகளுக்கும், கல்லூரி கல்வி இயக்ககம் நேற்று (மே 10) உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சென்னை லயோலா கல்லூரி முதல்வர் தாமஸ் அமிர்தம் கூறுகையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக 4 தேர்வுகள் நடத்தப்பட்டதாகவும், மீதியுள்ள 3 தேர்வுகள் மே 15க்கு மேல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து குருநானக் கல்லூரியின் முதல்வர் ரகுநாதன் தெரிவிக்கையில், ஆன்லைன் தேர்வுகளை நடத்த வேண்டாம் என அரசு சொல்லும் வரை, திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என கூறியுள்ளார்.
டி.ஜி வைஷ்ணவ் கல்லூரி முதல்வர் சந்தோஷ் பாபு கூறும்போது, மே 17ஆம் தேதி நடத்தப்பட வேண்டிய ஆன்லைன் தேர்வுகளை ஜூன் மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மற்றும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தவிர மெட்ராஸ் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு, மே 17க்கு பிறகு ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. மேலும் அண்ணா பல்கலையில் மாணவர்களுக்கான மறுதேர்வுகள் மே 17ஆம் தேதிக்கு மேல் நடத்தப்பட உள்ளது.
بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، مايو 11، 2021
Comments:0
கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் – ஊரடங்கில் நடத்த திட்டம்?
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.