SBI வாடிக்கையாளர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு – மே 31 கடைசி தேதி !!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 05, 2021

Comments:0

SBI வாடிக்கையாளர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு – மே 31 கடைசி தேதி !!!

ஸ்டேட் பேங்க் இந்தியா தற்போது வாடிக்கையாளர்களுக்கு KYC அப்டேட் செய்ய தேவையான ஆவணங்களை தபால் மூலமாவோ அல்லது ஈமெயில் மூலமாகவோ அனுப்ப கடைசி தேதி மே 31 என்று அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான SBI வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது KYC அப்டேட் வீட்டிலிருந்தே தபால் மூலமாகவோ அல்லது ஈமெயில் மூலமாகவோ அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வரும் இச்சூழலில் வங்கி கிளைக்கு சென்று KYC அப்டேட் செய்ய முடியாது என்பதால் இந்த வசதியை தற்போது SBI அறிவித்துள்ளது. எனவே KYC அப்டேட் செய்ய வேண்டியவர்கள் வீட்டிலிருந்தே தங்களது அப்டேட் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து SBI தனது ட்விட்டர் பக்கத்தில் “நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக இருப்பதாலும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருப்பதாலும் KYC அப்டேட் செய்ய தேவையான ஆவணங்களை தபால் மூலமாவோ அல்லது ஈமெயில் மூலமாகவோ அனுப்பலாம்” என்று தெரிவித்துள்ளது. மே 31 வரை மட்டுமே இதற்கான கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews