இந்தியாவில் மிக பெரிய வங்கியான SBI வங்கி தனது இன்டர்நெட் சேவைகளை (இன்று) மே 7ஆம் தேதி இரவு 10.15 முதல் மே 8 ஆம் தேதி 1.45 மணி வரை மெயின்டெனன்ஸ் பணி காரணமாக தற்காலிகமாக முடக்க வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இணைய சேவை முடக்கம்:
இந்தியாவில் பெரிய பொதுத்துறை வங்கியான SBI வங்கி, நாடு முழுவதும் சுமார் 22,000 வங்கி கிளைகள் கொண்டுள்ளது. மேலும் மக்களின் பணப்புழக்கத்திற்கு ஏதுவாக 57,889 ஏடிஎம் இயந்திரங்களையும் வைத்து நிர்வாகம் செய்து வருகிறது. இதுதவிர யூனோ, யூனோ லைட், இண்டர்நெட் வங்கியியல், யூபிஐ சேவை போன்ற இணைய வழி மூலமாக சுமார் 85 மில்லியன் இண்டர்நெட் வங்கி வாடிக்கையாளர்களும், 19 மில்லியன் மொபைல் பேங்கிங் வாடிக்கையாளர்களும், 135 மில்லியன் யூபிஐ சேவை வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வளவு பெரிய வங்கி இணைய நிர்வாகத்தை சரி செய்ய சர்வர் மற்றும் இதர டிஜிட்டல் தளத்தில் மெயின்டெனன்ஸ் பணிகள் செய்ய வேண்டிய நிலைமை உள்ளது. கடந்த மாதம் இதே போல மெயின்டெனன்ஸ் பணிகளுக்காக யூனோ, யூனோ லைட், இண்டர்நெட் வங்கியியல், யூபிஐ சேவை ஆகியவை நிறுத்தப்பட்டது.
தற்போது இந்த மாதத்திற்கான பணிகள் மே 7 ஆம் தேதி (இன்று) இரவு 10 மணி முதல் மே 8 ஆம் தேதி 1.45 மணி வரை நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SBI வங்கி இணையதளத்தில் சில கோளாறுகள் ஏற்படுவது அனைவரும் அறிந்ததே அதனை சரி செய்யவே இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக SBI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
بحث هذه المدونة الإلكترونية
الجمعة، مايو 07، 2021
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.