இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா காலத்தில் அதன் பயனாளர்களுக்கு உதவியாக கூடுதல் டாக்டைம் சேவையை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
டாக்டைம் சேவை:
ஜியோ டெலிகாம் நிறுவனத்தை புதிய துவக்கமாக ஆரம்பித்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தனது வாடிக்கையாளர்களுக்கு பலவித இலவச சேவைகளை அறிவித்து, தற்போது இந்த துறையில் முதன்மை இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களை போல ஜியோவின் வர்த்தகம் மற்றும் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜியோவின் வருமானத்தை உயர்த்துவதற்காக சில புதிய சலுகைகளை அந்நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
அதன் படி கொரோனா தொற்று காரணமாக, ஜியோ போனுக்கு ரீசார்ஜ் செய்ய முடியாத சூழலில், அதன் வாடிக்கையாளர்களுக்கு, 300 நிமிடங்கள் என்ற அடிப்படையில் ஒரு மாததிற்கு இலவச டாக்டைம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதாவது ஜியோ போனில் ஒவ்வொரு நாளும் 10 கால்களுக்கு இலவசம் என்ற அடிப்படையில், 30 நாட்களுக்கு 300 நிமிடங்கள் என இலவச டாக்டைம் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஜியோ போன் வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டத்திற்கும், அதே அளவு பயனுள்ள மற்றொரு ரீசார்ஜ் திட்டமும் இலவசமாக வழங்கப்படும் எனவும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது ஒரு ஜியோ போன் வாடிக்கையாளர் 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மற்றொரு 100 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் அவருக்கு இலவசமாக வழங்கப்படும். மேலும் இந்த சலுகைகள் ஜியோ போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
بحث هذه المدونة الإلكترونية
السبت، مايو 15، 2021
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
GOOD ONE ......
ردحذف