CBSE 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை – கணித தாள் விதி கட்டாயமில்லை!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 04, 2021

Comments:0

CBSE 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை – கணித தாள் விதி கட்டாயமில்லை!!

2021 – 2022 சிபிஎஸ்இ வாரியத்தில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு 10ம் வகுப்பு கணித பாடத்தில் இருக்கும் வரைமுறைகள் நீக்கப்பட்டுள்ளதாக கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கு புதிய பதிவாளர் நியமனம் மாணவர் சேர்க்கை:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கடந்த 2019ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு பாடங்களில் தரநிலை மற்றும் அடிப்படை நிலை என்ற இரண்டு வகையான கணித பாடங்களை அறிமுகப்படுத்தியது. அடிப்படை நிலை கணித பாடமானது, தங்களது 11 மற்றும் 12ம் வகுப்புகளில் கணித பாடத்தை தொடர விரும்பாத மாணவர்களுக்கும், தரநிலை கணித பாடம் 11, 12ம் வகுப்புகளில் கணிதத்தை படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டது.
தங்களது உயர் வகுப்புகளில் கணிதத்தை தொடர விரும்பாத மாணவர்களுக்கு அவர்களின் பாட சுமையை குறைப்பதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 11 மற்றும் 12ம் வகுப்புகளில் கணித பாடத்தை படிக்க விரும்பும் மாணவர்கள் கண்டிப்பாக 10ம் வகுப்பில் தரநிலை கணிதத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணிதம் படித்த மாணவர்கள் 11ம் வகுப்பில் கணித பாடத்தை படிக்க விரும்பும் பட்சத்தில் அவர்கள் கண்டிப்பாக 10ம் வகுப்பு தரநிலை கணித பாட தேர்வு எழுதி இருக்க வேண்டும். புதிதாக வீடு வாங்குவோருக்கான முக்கிய அறிவிப்பு – LIC வீட்டுக்கடன் ஆவணங்கள் விபரம்!
தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய பகுதி தேர்வுகள் (Compartment Exams) நடத்தப்படவில்லை. இதனால் 10ம் வகுப்பில் அடிப்படை கணிதம் படித்த மாணவர்கள் 11ம் வகுப்பில் கணித பாடத்தை தேர்வு செய்ய அனுமதிக்கப்டுகிறார்கள் என்று கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பு நடப்பு கல்வி ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews