தருமபுரி, மே 28: கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள குறுகிய கால பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி வெளி யிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைப்பு அமைச் சகம் சார்பில், சுகாதாரத் துறை வாயிலாக கரோனா தடுப்புப் பணிக ளுக்கு ஒருமாத கால திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படஉள்ளது. இதில், அவசர மருத்துவ தொழில்நுட்பநர், உதவியாளர் (பொது) மற்றும் பராமரிப்பு, சுகாதார உதவியாளர், மருத்துவ உபகரணங்கள் தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு பயிற்சி வழங்கப்ப டும். பயிற்சி நிறைவு பெற்றவுடன் மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற் றில் தொழில்முறை பயிற்சியுடன் பணியில் சேரலாம். எனவே,10,பிளஸ்2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பயிற்சி யில் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புவோர், தங்களது பெயர், கல்வித் தகுதி, பெற விரும்பும் பயிற்சி ஆகிய விவரங்களை dstodpi2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மேலும், 9488709322, 98655 38426 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.