தேசிய டிஜிட்டல் நூலகத்தில் உள்ள புத்தகங்கள், ஆடியோ, காணொலி பாடங்கள் உள்ளிட்டவற்றை ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
புத்தகங்கள், காணொலி பாடங்கள் என சுமார் 4.89 கோடி தரவுகளுடன், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக மத்திய அரசு தேசிய டிஜிட்டல் நூலகத்தை அமைத்தது.
தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் இந்த நூலகம் செயல்படுகிறது. பள்ளிக் கல்வி, சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான தயாரிப்பு, பொறியியல், அறிவியல், மானுடவியல், இலக்கியம், சட்டம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பாடங்கள், ஆராய்ச்சியாளர்களின் ஆய்வறிக்கை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட பிரிவுகளாக டிஜிட்டல் நூலகத்தில் தரவுகள் உள்ளன. இந்த டிஜிட்டல் நூலகத்தை ஐஐடி காரக்பூர் வடிவமைத்தது.
இந்நிலையில், தேசிய டிஜிட்டல் நூலகத்தில் உள்ள புத்தகம், ஆய்வறிக்கை, ஆடியோ மற்றும் காணொலி பாடங்கள் உள்ளிட்டவற்றை ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள், ஆயாச்சியாளர்கள் பார்வையிட்டுப் பயனடைந்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மின்னணு நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் https://ndl.iitkgp.ac.in/ என்ற இணைய முகவரிக்குள் நுழைந்து, தங்களை டிஜிட்டல் உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர், அவர்களுக்கான பயனர் ஐடி, கடவுச்சொல் வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி, மின்னணு புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
بحث هذه المدونة الإلكترونية
الأحد، مايو 16، 2021
Comments:0
Home
EDUCATION
NEWS
ஒரு கோடி பேர் பயன்படுத்திய தேசிய டிஜிட்டல் நூலகம் : மத்திய கல்வி அமைச்சகம் தகவல்
ஒரு கோடி பேர் பயன்படுத்திய தேசிய டிஜிட்டல் நூலகம் : மத்திய கல்வி அமைச்சகம் தகவல்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.