பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், பல்கலை மற்றும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு, தேசிய அளவில், 100 பேருக்கு ஆராய்ச்சி விருது வழங் கப்படுகிறது. இதற்கு தேர்வாகும் ஆசிரியர்கள், மாநில அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள், மத்திய அரசின் ஆராய்ச்சி பணியில் ஈடுபடுவர்.
கடந்த, 2014 - 2016ம் ஆண்டுக்கான விருதுக்கு தேர்வானவர்களில், 22 பேர், தமிழகத்தைச் சேர்ந் தவர்கள். இவர்களுக்கு, மாநில அரசின் சார்பில், மத்திய அரசின் மாற்றுப் பணி வழங்க வேண்டும். இந்த காலத்துக்கு, மாநில அரசில் இருந்து, மாத ஊதியம் வழங்கப்படாது. ஆனாலும், இதற்கு மாநில அரசின் அனுமதி கிடைக்காமல், அவர்கள் ஆராய்ச்சி பணிக்கு செல்ல முடியவில்லை. இதுகுறித்து, பேராசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘ஆராய்ச்சிக்கு செல்வோரின் பணியிடத்தில், வேறு பேராசிரியரை நியமிக்க வேண்டும். மாறுதல் பெறு பவரின் சம்பளத்தை, அந்த இடத்துக்கு வரும் பேராசிரியருக்கு வழங்கலாம். ஆனால், இந்த நடவடிக்கையை உயர் கல்வித் துறை மேற்கொள்ளாததால், பேராசிரியர்களுக்கு ஆராய்ச்சி பணிக்கான அனுமதி கிடைக்கவில்லை' என்றனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.