முதல்வராகும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆசிரியர் சங்கங்களின் வாழ்த்தும் !!.பாராட்டும்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، مايو 02، 2021

Comments:0

முதல்வராகும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆசிரியர் சங்கங்களின் வாழ்த்தும் !!.பாராட்டும்!!

மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஏகோபித்த நம்பிக்கை அடிப்படையில் பெருவாரியான ஆதரவினைப் பெற்று நல்லாட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ள புதிய அரசுக்கும் அமைச்சரவைக்கும் லட்சோபலட்சம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் இயக்கம் தனது இதய பூர்வ நல்வாழ்த்துக்களையும், ஆதரவினையும் தெரிவித்துக்கொள்கிறது. மக்கள் சக்தியே மாபெரும் சக்தி மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதற்கேற்ப தமிழக மக்களின் அமோக ஆதரவு பெற்று தமிழக முதல்வராக மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு எல்லோருடைய நம்பிக்கை நட்சத்திரமாக இன்று திகழ்கிறார். எதிர்பார்ப்பு- மக்கள் தீர்ப்பை மதித்து மக்கள் ஆட்சியின் மாண்பை காத்திட மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி தூய்மையான லஞ்ச லாவண்யமற்ற திறமையான துரிதமாக செயல்படும் நல்லாட்சியை நடத்திடவும். கல்வி நலன்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைத் தீர்த்து ஆசிரியர் நலன்களை பேணிக்காத்திடவும் அதன் மூலம் தமிழகக் கல்வியில் மலர்ச்சியும் வளர்ச்சியும் பெற்றிட மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள அரசு தலையாய பணியாக செயல்படுத்திட வேண்டுமென்பதே எங்கள் எதிர்பார்ப்பு: மேலும் கடந்த காலங்களில் மாண்புமிகு டாக்டர்கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போதுதான் நடுவணரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தினை தமிழ் நாட்டு ஆசிரியர்களுக்கும் வழங்கினார். அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் போராடுகின்ற போதெல்லாம் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து சுமூகமான தீர்வு கண்டார். அதே வழியில்தான் கழக அரசு பீடு நடை போடுமென்ற எதிர் பார்ப்பும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது. அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள அனைவருக்கும் இயக்கம் வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சட்ட மன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டையும் வாழ்த்தையும் இவ்வியக்கம் தெரிவித்துக்கொள்கிறது. நம்பிக்கை: தமிழக சட்டமன்றத்தில் ஆசிரியர்கள் நலன், கல்வி நலன் பற்றிய கொள்கைகளிலும், செயல்பாடுகளிலும் இயக்கத்திற்கு ஆதரவாக தேர்ந்தெடுக்கப் பட்ட சட்ட மன்ற உறுப்பினர் பெருமக்கள் செயல்படுவர் என ஆசிரியர் கூட்டணி நம்புகிறது.
பத்தாண்டுக்குப்பின் முதல்வராகும் திமுக தலைவர் தளபதி முக ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்தும் !!.பாராட்டும்!! அறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயம் பெற்று, ஆற்றலின் உருவமான முத்தமிழறிஞர் கலைஞரின் மறு உருவமாக விளங்கி,அவராகவே திகழும் தளபதி அவர்களே தா பாண்டியன் ஜனசக்தியில் என்னை ‘குட்டி கருணாநிதி முத்துசாமி" என எழுதியதை என்னிடம் சுட்டிக்காட்டி கலைஞர் பெருமானால் பாராட்டப்பட்டவன் என்ற முறையிலும், 50 ஆண்டுகாலம் ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் என்ற முறையிலும்,கலைஞர் பெருமானின் திருக்கரங்களால் ஆசிரியர் சமுதாயத்துக்கு பலப்பல நன்மைகள் பெற்றுத் தந்தவன் என்ற முறையிலும், 1970 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் இருமுறை ஆசிரியர் தொகுதி MLC ஆக பணியாற்றியவன் என்ற முறையிலும், கலைஞரின் பேரன்புக்குரியவன் என்ற முறையிலும், சங்காது தமிழகம் முழுவதும் சுற்றிப்பணியாற்றி பெருவெற்றிபெற்று தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆகியுள்ள நல்ல தம்பியே! தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்தையும் பாராட்டுக்களையும் தமிழ்நாட்டின் மொத்த ஆசிரியர் சமுதாயத்தின் சார்பில் மகிழ்வாக தெரிவிக்கின்றேன். நன்நெஞ்சுடன் தமிழ்நாட்டு மக்களுக்கு தலை சிறந்த சேவையாற்றி நலமுடன் நூறாண்டு வாழ்க என ஆசிரியர் இனம் முழுவதின் சார்பிலும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வாழ்த்துகிறோம். கொரொனா தடை நீங்கியதும் விரைவில் சங்கப் பொறுப்பாளர்களுடன் நேரில் வந்து வாழ்த்துகிறோம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة