உயர்கல்வித் துறைச் செயலாளராக இரண்டு நாள்கள் மட்டுமே இருந்த திரு. தீரஜ்குமார் மாற்றப்பட்டு, திரு கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு. தீரஜ்குமார் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் இரண்டு நாளில் மூன்றுமுறை மாற்றப்பட்டுள்ளனர். இன்றும் மாற்றப்பட்ட அதிகாரிகள் சிலருடன் சேர்ந்து 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி அயல்பணியிலிருந்து தமிழக பணிக்கு திரும்பிய அதிகாரி ஷிவ்தாஸ் மீனாவுக்கு முக்கிய துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார். மாற்றப்பட்ட அதிகாரிகள் பழைய பதவி விவரம்:
1. அயல் பணியில் மத்திய சுற்றுச்சூழல் துறை தலைவராக பதவி வகித்த ஷிவ்தாஸ் மீனா மாநில பணிக்கு திரும்பிய நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து தீரஜ்குமார் மாற்றப்பட்டு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 3. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலர் கார்த்திகேயன் மாற்றப்பட்டு உயர்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. போக்குவரத்து கழக ஆணையர் பதவி வைக்கும் ஜவகர் மாற்றப்பட்டு கால்நடை, பால்வளம், மற்றும் மீன்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப்பதவி கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்த்துக்கு நிலை உயர்த்தப்பட்டுள்ளது.
5. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி வகிக்கும் ஹர்மந்தர் சிங் மாற்றப்பட்டு சர்க்கரை துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆணையர் அந்தஸ்தில் இருந்த சர்க்கரை துறை கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்திற்கு நிலை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.