சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் பேரவையின் சார்பில் பொதுச் செயலாளர் முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மதச்சார்பற்ற திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் பேரவை தனது முழுமையான ஆதரவை வழங்கியது. தற்போது மாபெரும் வெற்றி பெற்ற திமுகவுக்கு சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் பேரவை வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக கல்வித்துறை பெரிதும் களங்கப்பட்டுக் கிடக்கிறது. திமுக தலைவர் கலைஞர் காலத்தில் கல்வித்துறை சிறந்து இருந்தது போல மீண்டும் கல்வித்துறை உயர்நிலை அடைய வேண்டும்.
ஜாக்டோ- ஜியோ: நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு விடியலைத் தரப் போகின்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக ஆசிரியர் அரசு ஊழியர் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் இரா.தாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது கடும் உழைப்பினால் மீண்டும் இந்த மகத்தான வெற்றி பெற்றுள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன்: கடும் உழைப்பால் அறுதிப் பெரும்பான்மை வெற்றியை குவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் வாழ்த்துகிறோம். தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமைந்திடவும், கல்வித்துறை மீண்டும் சீர் பெறவும், அரசு ஊழியர் ஆசிரியர் பிரச்னைகளை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பி.கே.இளமாறன்: தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையின் நல்லாட்சி அமைய தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، مايو 04، 2021
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.