புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழையவே முடியாது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் பொறியியல் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்துள்ளதாகக் கூறியிருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இதுதொடர்பாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். சென்னை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதையடுத்து நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ''அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட மதிப்பெண் குறைந்துள்ளதாகப் புகார் அளித்துள்ளனர். அவர்கள் உள்ளிட்ட 4 லட்சம் மாணவர்களும் விருப்பப்பட்டால் தேர்வை எழுதலாம். முன்பு ஆன்லைன் தேர்வு ஒரு மணி நேரமாக இருந்தது. தற்போது மூன்று மணி நேரம் தேர்வு நடத்தப்பட உள்ளது. மற்ற பல்கலைக்கழகங்களில் தேர்வு நடத்தப்படுவது போல அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும். எனினும் இத்தேர்வை எழுதுவதற்கு தேர்வு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை
தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்டு, மாணவர்கள் மேற்படிப்புக்கு அல்லது வேலைக்குச் செல்லலாம். இந்த மறு தேர்வுகள் நடந்து முடிந்த பிறகு, வழக்கமான தேர்வுகளும் விரைவில் நடைபெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். நீதிமன்றம் அறிவித்தது போல நாங்கள் தேர்வை முறையாக நடத்துகிறோம். தேர்வைப் புறக்கணிக்கவில்லை.
எனினும் ஏற்கெனவே தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் இந்த முறை தேர்வுக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு தேர்வை எழுத வேண்டும். மீண்டும் தேர்வு எழுதினாலும் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதுவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
உயர் கல்வித்துறைச் செயலாளர் புதிய கல்விக் கொள்கை, அதில் உள்ள குறைகள் பற்றியும் புதிய கல்விக் கொள்கையை எப்படிச் செயல்படுத்த முடியும் என்பது குறித்தும் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் அவை அனைத்தையும் நாங்கள் ஆலோசித்து, நிச்சயமாக மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுவோம். புதிய கல்விக்கொள்கை நிச்சயம் தமிழ்நாட்டில் நுழையவே முடியாது என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
Search This Blog
Thursday, May 13, 2021
Comments:0
Home
MINISTER
NEP
Politicians
புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழையவே முடியாது: அமைச்சர் பொன்முடி உறுதி
புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழையவே முடியாது: அமைச்சர் பொன்முடி உறுதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.