முதல்வர் நிவாரண நிதிக்கு ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டும் - அரசாணை வெளியிட கோரிக்கை!
கரோனா பாதிப்பு உள்ளவர் களுக்கும், தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கும் உதவும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்கு, தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான அரசாணை வெளியீடுமாறுதமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரி யர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் டி.ஆர்.ஜான் வெஸ்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கி றோம். கரோணா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில்,அரசின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசுக்கு கை கொடுக்க முடிவு செய்துள்ளோம்,
கரோனா இரண்டாவது அலை யில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கும், மக் களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவி லியர்கள், தூய்மைப் பணியாளர் களுக்கு உதவும் நோக்கிலும், ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்.
முதல்வர் இது தொடர்பாக, உரிய தமிழக ஆணை பிறப்பிக்குமாறு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.
بحث هذه المدونة الإلكترونية
الاثنين، مايو 10، 2021
Comments:0
Home
ASSOCIATION
SALARY/INCREMENT
TEACHERS
முதல்வர் நிவாரண நிதிக்கு ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டும்: அரசாணை வெளியிட கோரிக்கை
முதல்வர் நிவாரண நிதிக்கு ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டும்: அரசாணை வெளியிட கோரிக்கை
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)



ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.