குடியிருப்பு பகுதிகளில், ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் தகவல்கள் திரட்டும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பாதிப்பிற்கு இடையிலும் அரசு பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. தனியார் பள்ளிகளில் இருந்து பலர், அரசுப்பள்ளிகளை தேடி வந்தனர்.
இக்கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான பணிகளை, தற்போதே துவங்குமாறு, தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கு அருகே உள்ள குடியிருப்புகளில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் தகவல்களை, சேகரிக்க உத்தரவிட்டுள்ளது. அங்கன்வாடிகளில், ஐந்து வயதுக்கு மேற்பட்டோர் விபரங்களை எளிதில் பெறலாம். இது தவிர, மாணவர்களின் உடன் பிறந்தவர்கள், ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனரா என, பெற்றோரிடம் விசாரிக்குமாறு ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், &'வழக்கமாக ஏப்., மே மாதங்களில் இப்பணி நடக்கும். கொரோனா தொற்று பரவுவதால், ஆசிரியர்கள் நேரடியாக குடியிருப்புகளுக்கு சென்று, குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க, விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாது.எனவே, தொலை தொடர்பு வசதிகள் மூலம், தகவல்கள் திரட்டி, உத்தேச பட்டியல் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை துவங்கும் போது, இப்பட்டியல் பயனுள்ளதாக இருக்கும்&' என்றனர்.
Sunday, May 09, 2021
மாணவர் சேர்க்கைக்கான பணி - தொடக்க கல்வித்துறை உத்தரவு!
STUDENTS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.