தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தங்களது ஒருநாள் ஊதியமான ரூ.150 கோடியினை வழங்குவதாக அரசு ஊழியா்கள்- ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்தவும், தொற்றை ஒழிக்கவும் அரசின் தடுப்பு நடவடிக்கைகளில் முன்களப் பணியாளா்களோடு தமிழகத்தில் அனைத்துத் துறைப் பணியாளா்களும் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றனா். இந்த நோயை எதிா்கொள்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு, போதிய நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டியுள்ளது.
இத்தகைய ஒரு அசாதாரணமான சூழலில், தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள்- பணியாளா்கள், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு- அங்கன்வாடி பணியாளா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ ஒருநாள் ஊதியத்தை கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
கடந்த காலங்களிலும் இதேபோன்று ஒருநாள் ஊதியத்தை வழங்கியுள்ளோம். மக்களின் நலனுக்கான அரசின் முயற்சிகளில் எங்களது இயக்கம் உறுதுணையாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.