'பிரதமரின், 'ஜீவன் ஜோதி பீமா' காப்பீடு திட்டத்தில் சேர்ந்தவர்கள், கொரோனாவுக்கு பலியானால், காப்பீடுதாரரின் குடும்பத்துக்கு, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும்' என, வங்கியாளர்கள் தெரிவித்தனர்.
அனைவருக்கும் வங்கி கணக்கு என்பது, மத்திய அரசின் இலக்கு; இதற்காக, டிபாசிட் தொகை எதுவும் இன்றி, வங்கிகளில், ஏழைகளுக்கு கணக்கு துவங்கப்பட்டது. கடந்த, 2015 முதல், இவர்களுக்காக, எளிய இரு காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.பிரதமரின், 'ஜீவன் ஜோதி பீமா' திட்டத்தில், ஆண்டுக்கு, 330 ரூபாயும், 'ஸ்வஸ்திய சுரக் ஷா பீமா' திட்டத்தில், 12 ரூபாயும், இதற்காக, வங்கி கணக்கில் பிடித்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் கூறியதாவது:ஸ்வஸ்திய சுரக் ஷா பீமா திட்டம், விபத்து பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கும். 'ஜீவன் ஜோதி பீமா' திட்ட காப்பீடுதாரர், எதிர்பாராமல் இறந்தால், அவரது குடும்பத்துக்கு, 2 லட்சம் ரூபாய் கிடைக்கும்.காப்பீடுதாரர், கொரோனாவுக்கு பலியானால், அவரது குடும்பத்துக்கு, 2 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும்.தவறாமல், பிரீமியம் செலுத்தியிருக்க வேண்டும். காப்பீடு பெற, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன், 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، مايو 11، 2021
1
Comments
Home
BANKING
SCHEMES
'ஜீவன் ஜோதி பீமா' திட்டத்தில் கொரோனா காப்பீடு ரூ.2 லட்சம் - வங்கியாளர்கள் அறிவிப்பு!
'ஜீவன் ஜோதி பீமா' திட்டத்தில் கொரோனா காப்பீடு ரூ.2 லட்சம் - வங்கியாளர்கள் அறிவிப்பு!
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
PGTRB EDUCATION GK... கல்வி உளவியல் மற்றும் பொது அறிவு 40 மதிப்பெண்களுக்கு தினமும் சிறு தேர்வு வறுமையிலும் ஏழ்மையிலும் வயது முதிர்வு காரணமாக கடைசி வாய்ப்பாக பயன்படுத்துவார்கள் https://chat.whatsapp.com/F202q18TvYRIZO9INxLZKH பயன்படுத்திக்கொள்ளுங்கள்
ردحذف