தபால் துறையில் புதிய சேமிப்பு திட்டங்கள் – மாதம் 5 ஆயிரம் வரை லாபம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 17, 2021

Comments:0

தபால் துறையில் புதிய சேமிப்பு திட்டங்கள் – மாதம் 5 ஆயிரம் வரை லாபம்!!

இந்தியாவில் வங்கிகளை போலவே தபால் துறையும் ஆண்டு சேமிப்பை அளித்து வருகிறது. மேலும் கூடுதல் பலனாக ஆண்டு சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 5 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். அது குறித்த விபரங்களை இப்பதிவில் காணலாம்.
சேமிப்பு திட்டம்:

பணம் என்பது தற்போதய சூழலில் எல்லாரும் முக்கியமானதாக கருதும் ஒரு விசயமாகும். முன்பை விட பணத்தை செலவு செய்யாமல் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் காணப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. கொரோனா பேரலை சேமிப்புக்கான அவசியத்தை உணர்த்தி இருக்கிறது. பொதுவாக வங்கிகளை பொறுத்தவரை நிலையான வைப்பு திட்டத்தின் கீழ் ஒருவர் தனது எதிர்காலத்திற்கான பணத்தை சேமித்து வைக்க முடியும்.

அதே நேரத்தில் தபால் நிலையங்களின் மாதாந்திர வருமான திட்டம், பணம் சேமிப்பில் நல்ல லாபத்தை தருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ஆண்டுக்கு 6.6 சதவீதம் வட்டி கிடைக்கிறது. மேலும் தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் அதிகபட்சமாக 4.50 லட்சம் வரை சேமிக்கலாம். ஒரு வேளை உங்கள் தபால் கணக்கு இணைப்புக் கணக்காக இருந்தால் அதிகபட்சமாக 9 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். ஒவ்வொரு மாதமும் 4,950 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். இந்த சேவைகளுக்கு நீங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகி உங்கள் அடையாள அட்டை, 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முகவரிச்சான்று போன்றவற்றை சமர்ப்பித்து, 1000 ரூபாயுடன் உங்கள் கணக்கை துவங்கலாம். அதன் பிறகு மாதாந்திர வருமானத் திட்டத்தில் நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பணத்தை சேமித்து வைக்க முடியும். ஐந்து ஆண்டுகளுக்கும், ஒவ்வொரு மாதமும் வட்டியாக 5 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். இந்த ஐந்து ஆண்டுகள் முடிவில் உங்களுக்கு அசல் தொகை கிடைக்கும். ஒருவேளை நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே உங்கள் சேமிப்புக் கணக்கை மூடவேண்டுமென்றால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். அதேசமயம் கணக்கு தொடங்கிய முதல் ஆண்டில் உங்கள் கணக்கை மூட முடியாது. பிறகு இரண்டாவது ஆண்டில் உங்கள் கணக்கை மூட விரும்பினால் பிரின்சிபல் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும். மூன்றாவது வருடத்தில் மூடினால் ஒரு சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews