தமிழகத்தில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு ரூ.4000 – அரசு பரிசீலனை!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 27, 2021

Comments:0

தமிழகத்தில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு ரூ.4000 – அரசு பரிசீலனை!!

ரேஷன் கார்டு இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் ரூ.4000 கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என கிரேஸ் பானு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மேலும் தமிழக அரசு இது குறித்து பரிசீலிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதானால் அரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது அரசு. மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வேலை இழந்தது வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனை கருத்திற் கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதன் படி முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. 2ம் தவணையான 2000 ரூபாய் ஜூன் மாதம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவர்க்கும் கிடைக்கும் இந்த 4000 நிவாரணத்தொகை குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு இது குறித்து வழக்கு தொடுத்துள்ளார். மேலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் இருந்து ஆஜரான தலைமை வழக்கறிஞர் ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் நிவாரண உதவியை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் இது குறித்து எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews