அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக ஜம்மு காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் மே 31 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்:
இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நோய் பாதிப்பு 4 லட்சம் வரை பதிவு செய்யப்படுகிறது. இந்த நோய் பாதிப்பால் பல மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அதிகரித்து வருகிறது.
அதனால் அம்மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தவிர 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகளும், தேர்வுகளும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு ஜம்மு காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் மே 31 வரை மூடப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
بحث هذه المدونة الإلكترونية
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.