தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு பள்ளிகளிலேயே நடை பெறும்; ஆன்லைன் மூலம் நடத்த வாய்ப் பில்லை என்றார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி.
திருச்சி மரக்கடை அரசு சையது முர் துசா மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத் துறை சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர் கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் களுக்காக கரோனா தடுப்பூசி முகாமை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவர் மேலும் கூறியது:
கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த அரசின் உத்தரவுகளைப் பொதுமக்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். குறிப் பாகமுகக்கவசம்,சமூக இடைவெளி அவ சியம். அப்போதுதான் முழுமையாக நம்மை நாம்பாதுகாத்துக்கொள்வதுடன் தமிழகத்தில் நோய் தாக்கமும் குறையும். விருப்பமுள்ள ஆசிரியர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம்;கட்டாயமில்லை. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்; மாணவர்கள் பள்ளி வகுப்பறைக்கு வந்தே தேர்வெழுது வர். ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்த வாய்ப்பில்லை. சுகாதாரத் துறை ஒப்புத லுடன் தேர்வுத் தேதி விரைவில் அறிவிக் கப்படும்.
மத்திய அமைச்சர் தலைமையில் நடை பெற்ற கல்வி தொடர்பான ஆலோச னைக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களிலும், மத்தியக் கல்வி முறையான சி.பி.எஸ்.இ. கல்வி முறையைக் கருத்தில் கொண்டுதான் கருத்துகளை முன்வைத் தனர். ஆனால், தமிழகம் மட்டுமே மாநி லக் கல்வியை முன்வைத்து வலியுறுத்தி யது. பள்ளி தேர்வுத் தேதியை மாநில அர சுதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அக்கூட்டத்தில் வலியுறுத்தினோம். பள்ளி மாணவர்களுக்கு எதிர்காலம் எவ்வாறு முக்கியமோ அந்தளவுக்கு அவர் களின் உடல் நலமும் முக்கியம். கரோனா வைக் கட்டுப்படுத்த முதல்வர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்றார் அவர். முகாமில் மொத்தம் 160 பேருக்கு தடுப் பூசிகள்போடப்பட்டன.
திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ எஸ்.இனிகோஇருதயராஜ், துணை இயக் குநர் (சுகாதாரப் பணிகள்) ராம்கணேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.