தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை - 2017, 2018 மற்றும் 2019 வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி ஆணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 28, 2021

3 Comments

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை - 2017, 2018 மற்றும் 2019 வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி ஆணை வெளியீடு

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை - 2017, 2018 மற்றும் 2019 வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (ட்டி2) துறை
நாள் 28.05.2021
பிலவ வருடம், வைகாசி 14 திருவள்ளுவர் ஆண்டு 2052
படிக்கவும்:
1. அரசாணை (டி) எண்.612, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (ட்டி2) துறை, நாள் 25.10.2018. 2. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரின் கடித எண்.பப/603/2021, நாள் 21.01.2021 மற்றும் 08.02.2021.
அரசாணை (4) எண். 204
ஆணை:
மேலே 1-ல் படிக்கப்பட்ட ஆணையில், 2011, 2012, 2013, 2014, 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

2) மேலே பார்வை 2-ல் படிக்கப்பட்ட கடிதங்களில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை, 2017, 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்கலாம் என அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளார். 3) மேற்கண்ட கருத்துருவினை அரசு ஆய்வு செய்து, தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பகங்களில் 2017, 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் (01.01.2017 முதல் 31.12.2019 வரை)
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு, சிறப்பு புதுப்பித்தல் சலுகையை வழங்கி அரசு ஆணையிடுகிறது:
(f) இச்சலுகையைப் பெற விரும்பும் நபர்கள், அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். (i) இச்சலுகை ஒரு முறை மட்டும் வழங்கப்படும்.
(i) மூன்று மாதங்களுக்குப்பின் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். (iv) 1.1.2017-க்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் கொள்ளப்பட மாட்டாது.மேலே கண்ட இவ்வாணை பற்றிய விவரங்களை இரண்டு முன்னிலை தமிழ் நாளிதழ்களில் வெளியிடுவதுடன், அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் உள்ள தகவல் பலகையில் (Notice Board in all Employment Exchanges) பொது மக்களின் தகவலுக்காக வைக்க வேண்டும் என அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்குமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் அறிவுறுத்தப்படுகிறார்.

3 comments:

  1. Very useful message.thank you

    ReplyDelete
  2. 2011 பின்னர் நான் புதுபிக்கவில்லை நான் புதுபிக்களாமா

    ReplyDelete
  3. How to renival
    I am 2017 batch

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews