குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகம் உள்ளதால் அங்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மறுஅறிவிப்பு வரும் வரை தள்ளிவைக்கப்படுவதாக குஜராத் இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வு தள்ளிவைப்பு:
கோவிட் -19 தொற்று பரவல் குஜராத் மாநிலத்தில் கட்டுப்பாட்டை மீறி உள்ளதால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பள்ளிகள் திறப்பதற்கான தேதிகள் குறித்து எந்த வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. குஜராத் அரசு இந்த ஆண்டு 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி செய்து பதவி உயர்வு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. குஜராத் இடைநிலைக் கல்வி வாரியம் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கல்வி வாரியம் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பீடு முறைகளை விரைவில் அறிவிக்க உள்ளது. உள் மதிப்பீடு மற்றும் வகுப்பறை செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் மதிப்பிட வாய்ப்புகள் உள்ளது. குஜராத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய மாநிலம் முழுவதும் மாணவர்கள் இப்போது அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பு காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளிவைப்பதாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். தள்ளிவைக்கப்பட்டுள்ள தேர்வின் புதிய தேதிகள் விரைவில் அரசின் சார்பில் வெளியிடப்படும். மேலும், ஜூலை மாதம் தேர்வுகள் நடத்தப்படும் என்று கருதப்படுகிறது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.