TRB - முதுநிலை ஆசிரியர் பணி: பதிவு தள்ளி வைப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 02, 2021

Comments:0

TRB - முதுநிலை ஆசிரியர் பணி: பதிவு தள்ளி வைப்பு.

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி, தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில் போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC/UPSC தேர்வுகளுக்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமி இலவச பயிற்சி - மார்ச் 10 கடைசி தேதி
இந்த தேர்வு, ஜூன், 26, 27ல் நடத்தப்பட உள்ளது. இதற்கு, நேற்று துவங்குவதாக இருந்த, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட செய்திக்குறிப்பு :முதுநிலை ஆசிரியர், கணினி பயிற்றுனர்தரநிலை~ ~ 1, உடற்கல்வி இயக்குனர் நிலை ~ ~1 ஆகிய பதவிகளுக்கு, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டது.
இந்திய ராணுவ கல்லுாரி தகுதி தேர்வு அறிவிப்பு
இந்த தேர்வின் ஆன்லைன் விண்ணப்பம் துவங்க, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால், விண்ணப்ப தேதி தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews