தொலைதூரம், திறந்தவெளி, இணையவழி மேலாண் படிப்பு தொடங்க புதிய நெறிமுறை: AICTE வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مارس 10، 2021

Comments:0

தொலைதூரம், திறந்தவெளி, இணையவழி மேலாண் படிப்பு தொடங்க புதிய நெறிமுறை: AICTE வெளியீடு!

கல்வி நிறுவனங்களில் மேலாண்மை உள்ளிட்ட படிப்புகளை தொலைதூரம், திறந்தநிலை மற்றும் இணையவழியில் தொடங்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ளது.
12வது, டிகிரி படிப்புக்கு அலுவலக உதவியாளர் வேலை - 433 காலி பணியிடங்கள் - மார்ச் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
இதுதொடர்பாக ஏஐசிடிஇ வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு: மேலாண்மை, கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொறியியலில் உள்ள தகவல் அறிவியல், தொழில்நுட்ப களம்,தளவாடங்கள் மற்றும் சுற்றுலா ஆகிய பிரிவுகளில் உள்ள படிப்புகளை தொலைதூரம், திறந்தவெளி மற்றும் இணைய வழி முறையில் வழங்க ஏஐசிடிஇ ஒப்புதல் வழங்கிஉள்ளது. தகுதிகள் நிர்ணயம் அதன்படி, மேற்கண்ட படிப்புகளை வழங்க கல்வி நிறுவனங்களுக்கு சில தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நாக் அங்கீகாரம் 3.26 (4),என்பிஏ-வில் 1,000-க்கு 700 மதிப்பெண்கள், தேசிய தரவரிசைபட்டியலில் (என்ஐஆர்எஃப்) முதல் 100 இடம் ஆகிய 3-ல் ஏதேனும் 2 தகுதிகளை பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே தொலைதூரம், திறந்தவெளி, இணையவழியில் படிப்புகளை தொடங்க அனுமதி வழங் கப்படுகிறது.
WANTED PROFESSORS/ASSO. PROFESSORS/ASST. PROFESSORS
விருப்பமும் தகுதியும் உள்ள கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். அதன்படி, படிப்புகளின் கால அளவுக்கு ஏற்றவாறுஆண்டுக்கு 3 முறை மாணவர்சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://www.aicte-india.org/ என்ற இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة