அரசு ஊழியர் ஊதிய உயர்வில் உள்ள, குறைபாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட, ஒரு நபர் குழு அளித்த பரிந்துரைப்படி, சில பிரிவு பணியாளர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதில், முரண்பாடுகள் இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், போராட்டம் நடத்தின.
ஒரு நபர் குழு பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய வீதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு!
இதையடுத்து, ஊதிய உயர்வில் உள்ள குறைபாடுகளை களைய, நிதித் துறை செலவினங்கள் முதன்மை செயலர் சித்திக் தலைமையில், ஒரு நபர் குழுவை, தமிழக அரசு நியமித்தது. இக்குழு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியது. அவர்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பரிசீலித்தது. அவற்றை பரிசீலனை செய்து, ஒரு நபர் குழு, அறிக்கை தயார் செய்தது. குழுத் தலைவரான சித்திக், 2019 ஜூன் மாதம், அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கை, அரசின் பரிசீலனையில் இருந்தது.
பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க கோரிக்கை
ஒரு நபர் குழு பரிந்துரையை ஏற்று, ஒவ்வொரு துறையிலும், ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, பிப்., 26ம் தேதி, தனித்தனி அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி, பல துறைகளில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.