மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் தேர்தலில் பணியாற்ற உள்ள தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் என அனைவரும் குரானா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டி அறிவுறுத்தப்படுகிறது. எனவே மாவட்டத்தில் தேர்தல் பணி மேற்கொள்ளவிருக்கும் அனைத்து தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டோரின் பள்ளி வாரியான விவரத்தினை வட்டார வள மைய தலைமையாசிரியர்கள் இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து தங்கள் சார்ந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கிறது.
மேலும் மாவட்ட கல்வி அலுவலர்கள் குறுவளமைய தலைமை ஆசிரியர்களிடமிருந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டோரின் விவரங்களை தொகுத்து அலுவலகத்திற்கு தினசரி அனுப்பி வைக்கவேண்டும் தெரிவிக்கப்படுகிறது முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணகிரி மாவட்டம்

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.