அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலும் 11 மாணவிகளுக்கு கொரோனா - பள்ளிக்கு 7 நாட்கள் விடுமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، مارس 11، 2021

Comments:0

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலும் 11 மாணவிகளுக்கு கொரோனா - பள்ளிக்கு 7 நாட்கள் விடுமுறை

விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 5 பேருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. மன்னார்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலும் 11 மாணவிகளுக்கு கொரோனா
Opening Online Application for JEE (Main) March 2021 Examination - Public Notice - PDF திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே உள்ள விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 5 பேருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
Extension of last date for display of Question Papers & Challenge of Answer Keys for GPAT-2021 - PDF
இதையடுத்து தொற்று உறுதியான 5 மாணவிகளும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 24 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை முடிவு நேற்று வந்தது. இதில் பள்ளியில் படிக்கும் மேலும் 11 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மன்னார்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
Opening Online Application for JEE (Main) March 2021 Examination - Public Notice - PDF
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து பள்ளிக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة