6ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம்; உரிய ஆசிரியர்கள் இன்றி சாத்தியம் ஆகுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 05, 2021

Comments:0

6ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம்; உரிய ஆசிரியர்கள் இன்றி சாத்தியம் ஆகுமா?

தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த இடைக்கால பட்ஜெட்டில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்படும் என்ற ஒற்றை வாக்கியம் இடம் பெற்றது.பெரும்பாலான தனியார் பள்ளிகள் தொடக்க வகுப்பிலேயே அவர்களுக்கு கணினி பாடங்களை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளியில் ஒரு மாணவன் பிளஸ் 1 வகுப்பில்தான் கணினி அறிவியல் படிக்க முடிக்கிறது.இதனால் அவர்கள் உயர்கல்வியில் பல இடர்பாடுகளை சந்திக்கின்றனர். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.அரசு பள்ளி மாணவர்களுக்கும் கணினி கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், 'ஒன்றாம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடப்பிரிவை அரசு பள்ளிகளில், ஆறாவது பாடமாக தொடங்க வேண்டும்,
சம்பளம் இல்லாமல் தவிக்கும் அரசு கல்லூரி ஆசிரியர்கள்
கட்டாயப் பாடமாக கணினி பாடத்தை பயிற்று வைக்க வேண்டும்' என்ற கோரிக்கையை கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து முன்வைத்தனர்.இதன் விளைவுதான், தமிழக அரசின் ஒற்றை வாக்கிய அறிவிப்பாக மலர்ந்தது.தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொது செயலாளர் குமரேசன் கூறியதாவது:கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி 2011ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடம் சமச்சீர் கல்வியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தனி பாடமாக கொண்டு வந்தது. அதிமுக அரசு அதனை மாணவர்களுக்கு வழங்காமல் குப்பையில் போட்டது. கணினி ஆசிரியர்களுக்கு 'டெட்', 'ஏ.இ.இ.ஓ.,', 'டி.இ.ஓ.,' போன்ற தேர்வுகள் கிடையாது. கடந்த, 2011ல் அ.தி.மு.க., அரசு வந்தவுடன் பகுதிநேர ஆசிரியர்களை பணியமர்த்தியது. கணினி அறிவியலில் பி.எட்., முடித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை.கடந்த, 10 ஆண்டுகளாக தனியார் பள்ளியில் கூட வேலை கிடைக்காத ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது, 814 ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில், திடீரென வந்த அரசாணையால், 60 ஆயிரம் பேரில் 25 ஆயிரம் பேர் மட்டும் தேர்வு எழுத முடிந்தது. மீதமுள்ள 35 ஆயிரம் பேர் தேர்வை கூட சந்திக்க முடியவில்லை.ஆசிரியரின்றி கணினிக்கல்வி சாத்தியமா?தற்போது, ஆறு முதல் பத்தாம் வகுப்பிற்கு, 'டேப்' மட்டும் வழங்கிவிட்டு, பள்ளியில் உள்ள பிற பாட ஆசிரியர்களை வைத்தே அவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு நடக்கிறது. இதற்கான பயிற்சி துவங்கிவிட்டது. கணினி அறிவியல் பாடத்தை பயிற்றுவிக்க அதற்கு உரிய துறையில் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
சம்பளம் இல்லாமல் தவிக்கும் அரசு கல்லூரி ஆசிரியர்கள்
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews