சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் ஆணை பிரிவு 144(4)ன் கீழான தடையாணை உத்தரவு - Dt: 01.03.21 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 01, 2021

Comments:0

சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் ஆணை பிரிவு 144(4)ன் கீழான தடையாணை உத்தரவு - Dt: 01.03.21

சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் ஆணை பிரிவு 144(4)ன் கீழான தடையாணை உத்தரவு

குற்றவியல் நடைமுறை சட்டம் 1973

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., ஆகிய கொரோனா வைரஸ் மற்றும் தொற்று சமூக நோய் இடைவெளி பரவுதலை தடுக்கும் ஏற்படுத்துதலை பொருட்டு வலியுறுத்தி நான் தனிமைப்படுத்துதல் சட்டப்பிரிவு (2), தொற்றுநோய் சட்டம் மற்றும் ஒழுங்குமுறை 1897-ல் விதித்துள்ள கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நாளிட்ட G.O.MS. எண். 84, வருவாய் மற்றும் பேரழிவு மேலாண்மை துறை, அரசு ஆணையின்படி, சட்டப்பிரிவு 144 (4) குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 மற்றும் பிரிவு 20 (2) குற்றவியல் நடைமுறை சட்டம் (மத்திய சட்டப்பிரிவு (2) 1974)-ன் கீழ் காவல் துறையின் முன் அனுமதி இன்றி திறந்த வெளியில் குழுமுதல் / கூட்டங்கள் நடத்துதலை தடை தடைசெய்யும் ஆணை, 1-2-2021 அன்று இரவு 00.00 மணி முதல் 28-2-2021 அன்று (நள்ளிரவு 12.00 மணி வரை) நீட்டிக்கப்பட்டது
2) மேலும், தமிழ்நாடு அரசு, சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை தகுந்த வழிகாட்டுதல்களுடன் 31.3.2021 அன்று நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது

3) தற்போது, அதன் பொருட்டு, உள்துறை அரசாணை எண்.736, நாள் 28.3.1974ன் படி குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 144 (4) மற்றும் பிரிவு 20 (2) குற்றவியல் நடைமுறை சட்டம் (மத்திய சட்டப்பிரிவு (2) 1974) ல் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இகாப., ஆகிய கூடுதல் மாவட்ட நீதிபதி அந்தஸ்திலுள்ள என்னால், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசின் 28-2-2021 நாளிட்ட G.O.MS. எண். 318, வருவாய் மற்றும் பேரழிவு மேலாண்மை துறை-ல் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை வழிக்காட்டுதலின்படி நடைமுறைப்படுத்திடும் வகையில், காவல் துறையின் முன் அனுமதியின்றி சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் இடவசதிக்கு ஏற்ப 50% பங்கேற்பாளர்களுடன் சமூக, அரசியல், விளையாட்டு, கலாச்சாரம் பொழுதுபோக்கு மற்றும் மத நிகழ்வுகளை நடத்துதலை தடை செய்யும் ஆணை 1.3.2021 அன்று இரவு 00:00 மணி முதல் 31.3.2021 அன்று 24:00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. 4) 144 குவிநச-ன் கீழ் அமல்படுத்தப்பட்டுள்ள மேற்படி தடையாணை, மேற்குறிப்பிட்ட மாநில அரசு ஆணைகளில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் இவ்வாணையை தொடர்ந்து எதிர்வரும் நாட்களில் அறிவிப்புகள் ஏதேனும் வெளியிடப்படுமாயின், அவற்றிற்கும் பொருந்தும்

5) மேற்படி ஆணையை மீறுபவர்கள் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்

6) மேற்படி ஆணை அனைவருக்கும் தனித்தனியே சார்பு செய்ய இயலாததால், பத்திரிகை, மின்னணு ஊடகங்கள் மற்றும் சென்னை பெருநகர காவல்துறையின் அதிகாரப் பூர்வ வலைதளங்களில் வெளியிடப்படும் மேலும், இவ்வாணையின் நகல்கள் மாவட்ட துணை ஆணையாளர்கள் அலுவலகம், சரக உதவி ஆணையாளர்கள் அலுவலகம் மற்றும் அனைத்து காவல் நிலையங்களின் அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்படும்

7) மேற்படி ஆணை பொதுமக்கள் நலன், பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை நிலைநாட்டும் பொருட்டு தற்போது பிறப்பிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews