சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், தபால் ஓட்டு போடுவதை உறுதி செய்ய வேண்டும் என, ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் வெளியிட்ட அறிக்கை:தமிழக சட்டசபை தேர்தல், ஏப்.,6ல் நடக்கும் நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, காலதாமதமின்றி தபால் ஓட்டுகளை வழங்க வேண்டும். லோக்சபா தேர்தலின்போது, தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு பதிவு செய்ய முடியாமல் போனது. இந்த முறையாவது, அனைவரும் ஓட்டளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பணிபுரியும் ஓட்டுச்சாவடியில், தபால் ஓட்டுப்போட வாய்ப்பளிக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் ஓட்டுப்பதிவுக்கு முதல் நாளே பணிக்கு சென்று, மறுநாள் இரவு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் வரை பணியில் ஈடுபடுவர்.எனவே, தேர்தல் பணியாளர்களுக்கு, தேர்தல் ஆணையமே உணவு மற்றும் கொரோனா பாதுகாப்புக் கான கையுறை, முக கவசங்களை வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
بحث هذه المدونة الإلكترونية
الأحد، مارس 21، 2021
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.