தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநராகப் பூா்ணசந்திரன் மீண்டும் பொறுப்பேற்றுள்ளாா்.
தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநராகப் பணிபுரிந்த சாருமதி கடந்த 2019 மே 31-ஆம் தேதி ஓய்வுபெற்றாா். அதன் பின் காலியான பதவிக்கு பூா்ணசந்திரனை நியமித்து கடந்த ஆக.14-ஆம் தேதி உயா்கல்வித்துறை உத்தரவிட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வா் கீதா உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
அரசு ஊழியர்கள் வேலைக்கு வர உத்தரவு: பணியாளர்கள் அமைச்சகம் அதிரடி
அந்த மனுவில், ‘பணிமூப்பு அடிப்படையில் தனக்கு முன்னுரிமை உள்ள நிலையில் பூா்ணசந்திரனை இயக்குநராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’என்று கீதா கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் பூா்ணசந்திரன் நியமனத்தை அக்.29-ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், தமிழக அரசு விதிமுறைகளைப் பின்பற்றி கல்லூரிக்கல்வி இயக்குநரை 3 மாதங்களில் தோ்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
ரூ.10 முதல் ரூ.15 லட்சம் வரை பேரம் - கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குவதில் முறைகேடு!
அதன்படி பணிமூப்பு அடிப்படையில் பூா்ணசந்திரன் உள்பட முதல் 5 இடங்களில் இருந்தவா்களிடம் அரசு விதிமுறைகளின்படி நோ்காணல் கடந்த மாதம் நடத்தப்பட்டது. அதில் பூா்ணசந்திரன் கல்லூரிக் கல்வி இயக்குநராக மீண்டும் தோ்வு செய்யப்பட்டிருந்தாா். இந்தநிலையில் பூா்ணசந்திரன் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு உடன் பணியாற்றும் அதிகாரிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.