'கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வை எழுதும் கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மறுதேர்வு நடத்த முடியாது' என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு அக்டோபரில் நடந்து முடிந்தது.
வயது வரம்பின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:கொரோனா ஊரடங்கு மற்றும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக பலர் தேர்வுக்கு தயாராக முடியாத நிலை ஏற்பட்டது.
தேர்வு நடைபெற்ற நேரத்தில் பல்வேறு மாநிலங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாகவும் பலர் தேர்வை நழுவவிட்டனர்.வயது வரம்பின் அடிப்படையில் தேர்வு எழுதுவதற்கான கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 'வயது வரம்பு அடிப்படையில் கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்களுக்காக மீண்டும் மறு தேர்வு நடத்த முடியாது' என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும் இது தொடர்பாக மீண்டும் ஆலோசனை நடத்த மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை பிப்.,5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، فبراير 02، 2021
Comments:0
சிவில் சர்வீஸ் மறுதேர்வு கிடையாது: மத்திய அரசு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.