மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை; எப்படி விண்ணப்பிக்கலாம்?- யுஜிசி அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 03, 2021

Comments:0

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை; எப்படி விண்ணப்பிக்கலாம்?- யுஜிசி அறிவிப்பு.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை வழங்கப்படும் என்றும், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒற்றைப் பெண் குழந்தை, மெரிட் மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. அந்த வகையில், உயர் கல்வித்துறையைக் கண்காணிக்கும் ஆணையமான யுஜிசி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எம்.ஃபில். அல்லது பிஎச்.டி படிக்க விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இந்த உதவித்தொகைக்குத் தகுதியானவர்கள். இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம். உதவித்தொகையைப் பெற மாணவர்கள் ugc.ac.in/ugc_schemes என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப பிப்ரவரி 15-ம் தேதி கடைசி நாள் எனவும் யுஜிசி அறிவித்துள்ளது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:
1. குடியிருப்புச் சான்றிதழ்.
2. மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்.
3. சாதிச் சான்றிதழ் (எஸ்சி / எஸ்டி / ஓபிசி பிரிவினராக இருந்தால்).
4. தேர்வரின் சமீபத்திய வண்ணப் புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்.
5. முதுகலைப் பட்டப் படிப்பு மதிப்பெண் சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்.
6. எம்.பில். அல்லது பிஎச்.டி படிக்கப் பதிவு செய்திருக்கும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தின் முதல்வரிடம் இருந்து சான்றிதழ்.
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் அனைத்தும் தேவை என யுஜிசி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews