விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يناير 28، 2021

Comments:0

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை மூலம் தமிழகத்தில் உள்ள கோவில்களில் காலியாக உள்ள கணினி இயக்குநர், தட்டச்சர், நாதஸ்வரம், ஓட்டுநர், ஜெனநேரட்டர் இயக்குபவர், பெரியறை போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை
மொத்த காலியிடங்கள்: 28 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: கணினி இயக்குநர் - 01
பணி: தட்டச்சர் - 01
பணி: நாதஸ்வரம் - 01
பணி: ஜீப் / கார் ஓட்டுநர் - 01
பணி: ஜெனரேட்டர் ஓட்டுநர் - 01
பணி: பெரியறை - 01
பணி: பத்துவிளக்கி - 01
பணி: சாதகாச்சாரி - 01
பணி: உபகைங்கர்யம் - 04
பணி: மகன்யாசம் - 03
பணி: 2ம்நிலை சபையார் - 01
பணி: தீவெட்டி - 01
பணி: திருச்சின்னம் - 02
பணி: திருமாலை கட்டி - 02
பணி: தோப்புகாவல் - 06 வயது வரம்பு : 01.02.2021 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ, தமிழ்ல் தட்டச்சு பிரிவில் தேர்ச்சி, இசை சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், பூஜை மற்றும் அபிஷேகங்களுக்கான சாமானகள் உரிய நேரத்தில் எடுத்துக் கொடுக்கும் பணியில் முன் அனுபவம் உள்ளவர்கள், திருக்கோவில் பூஜை முறைகள், திருச்சின்னம் கருவி இசைக்க தெரிந்தவர்கள், வேத பாட சாலையில் பயின்றதற்கான பெற்றிருப்பவர்கள், சுவாமி சாத்துப் படிக்கான பூக்கள் மற்றும் மாலைகள் தொடுப்பதற்கு முன் அனுபவம் பெற்றிருப்பவர்கள், தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருப்பவர்கள், தோப்பு பராமரிப்பு மற்றும் காவல் பணியில் முன் அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: மாதம் குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.62,000 வரை வழங்கப்படும். தேர்வு செயப்படும் முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு ராமநாத ஸ்வாமி திருக்கோவில், ராமேசுவரம் - 623526 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.02.2021
மேலும் விவரங்கள் அறிய https://tnhrce.gov.in//resources/docs/hrce_whatsnew/58/PaperNewswebsite.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة