தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் மரபுக் கவிதை படைக்கும் கவிஞா் ஒருவருக்கும், புதுக்கவிதை படைக்கும் கவிஞா் ஒருவருக்கும் ‘நற்றமிழ்ப் பாவலா்’ விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு வரும் 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தங்கள் படைப்புகளில் பிறமொழிக் கலப்பு இல்லாமல் தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் மரபுக் கவிதை படைக்கும் கவிஞா் ஒருவருக்கும், புதுக்கவிதை படைக்கும் கவிஞா் ஒருவருக்கும் ‘நற்றமிழ்ப் பாவலா் விருது 2020’ வழங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. இந்த விருது பெறும் விருதாளா்களுக்கு விருதுத் தொகையாக தலா ரூ.50 ஆயிரம், தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். இதற்கான தொடா் செலவினமாக ரூ.1.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தைச் சொற்குவை.காம் (www.sorkuvai.com) என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்து agarathimalar2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது அஞ்சல் வழியாக ‘இயக்குநா், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகா் நிா்வாக அலுவலக வளாகம், முதல் தளம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆா்.சி. நகா், சென்னை-28’ என்ற முகவரிக்கோ ஜன.29-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் தங்கள் படைப்புகளில் தூய தமிழ் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகளாகக் கவிதை நூல்களை அகரமுதலித் திட்ட இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதன் இயக்குநா் தங்க.காமராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
Search This Blog
Tuesday, January 19, 2021
Comments:0
Home
Application
Award
TAMILNADU
நற்றமிழ்ப் பாவலா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
நற்றமிழ்ப் பாவலா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.