ரயில்வே ஆட்சேர்ப்பு வினாத்தாள் ‘அவுட்’ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 26, 2021

Comments:0

ரயில்வே ஆட்சேர்ப்பு வினாத்தாள் ‘அவுட்’

மேற்கு ரயில்வே துறை சார்பில் கடந்த 3ம் தேதி ஜூனியர் கிளார்க் மற்றும் கமர்ஷியல் கிளார்க் பதவிகளுக்கு என்.டி.பி.சி மற்றும் டி.சி.எஸ் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 12 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை ஆன்லைனில் வழங்கினர். குஜராத் மாநிலம் சூரத்தில் சுமார் இரண்டரை ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதினர். ஆனால் இந்த தேர்வுக்கான வினாத்தாள், தேர்வு நடப்பதற்கு முந்தைய 7 மணி நேரத்திற்கு முன்பு வாட்ஸ்அப் மூலம் லீக் ஆனது. இந்த மோசடி குறித்து கடந்த 21ம் தேதி ரயில்வே விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதையடுத்து மேற்கு ரயில்வே விஜிலென்ஸ் துறையின் முதற்கட்ட விசாரணையில், என்.டி.பி.சி மற்றும் டி.சி.எஸ் ஆகிய தனியார் அமைப்பின் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இவர்கள் ஒரு போலி வலைத்தளத்தை உருவாக்கி வினாத்தாளை லீக் செய்துள்ளனர். ஒரு வினாத்தாள் ரூ. 5 லட்சம் என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சாவர்குண்ட்லா பகுதியில் செயல்படும் என்டிபிசி மற்றும் டிசிஎஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு, அங்கு பணியாற்றிய 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews