'நீட்' தேர்வு மதிப்பெண் சான்றிதழை போலியாக தயாரித்து மோசடி செய்த வழக்கில், மாணவி கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் தீக் ஷா, 18. இவர், பல் டாக்டரான தந்தை பாலசந்திரன், 48, உடன் டிச., 7ல், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த, மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங்கில் பங்கேற்றார்.
அப்போது, மாணவி தீக் ஷா, தந்தையுடன் சேர்ந்து, போலியாக தயாரிக்கப்பட்ட, நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழை தாக்கல் செய்து, மருத்துவ கல்லுாரியில் சேர முயன்றது கண்டறியப்பட்டது. இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜன், சென்னை பெரியமேடு போலீசில் புகார் அளித்தார்.
மாணவி மற்றும் இவரது தந்தை ஆகியோர் மீது, போலீசார் மோசடி உட்பட, ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இருவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என, மூன்று முறை, 'சம்மன்' அனுப்பியும் ஆஜராகாமல் தலைமறைவாகினர். இதனால், தனிப்படை அமைத்து, இருவரையும் போலீசார் தேடி வந்தனர். மாணவியின் தந்தை பெங்களூரில் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஜன., 1ல் அங்கு சென்ற போலீசார், பாலச்சந்திரனை கைது செய்தனர்.
இவரை, நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பில், புரோக்கர் ஜெயகுமார் என்பவர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.இவரை போலீசார் தேடி வந்த நிலையில், மாணவியும், பெங்களூருவில் பதுங்கி இருப்பது, தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, தீக் ஷாவை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، يناير 19، 2021
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.