M.Tech சேர்க்கை நடக்குமா: மனஉளைச்சலில் மாணவர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 07, 2021

Comments:0

M.Tech சேர்க்கை நடக்குமா: மனஉளைச்சலில் மாணவர்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை அண்ணா பல்கலையில் எம்.டெக்., படிப்புகளில் சில பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தாததால் மாணவர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.
இப்பல்கலையில் எம்.டெக்., பயோ டெக்னாலஜி மற்றும் எம்.டெக்., கம்ப்யூட்டேஷன் பயாலஜி படிப்புக்கு 2020-- 2021 மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு 2020 அக்.,ல் வெளியிடப்பட்டது. 'டான்செட்' மற்றும் மத்திய அரசின் 'கேட்' மற்றும் 'கேட்- பி' நுழைவு தேர்வுகளில் அகில இந்திய ரேங்க் பெற்ற 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். ரேங்க் பட்டியலில் முதல் 30 இடங்களுக்கும் மேல் மதுரை, சென்னை, சேலத்தை சேர்ந்த மாணவர் உள்ளனர். இதுவரை இவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படவில்லை.பாதிக்கப்பட்ட மதுரை மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:எம்.டெக்., பயோ டெக்னாலஜியில் 25, கம்ப்யூடேஷன் பயோ டெக்., படிப்பில் 20 என 45 இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. கலந்தாய்வுக்கும் அழைக்கப்படவில்லை. எதிர்காலம் பாதித்துள்ளது. பல்கலையில் பலமுறை விளக்கம் கேட்டும் பதில் கிடைக்க வில்லை. அதிகாரிகளின் மெத்தனத்தால் 45 இடங்கள் வீணடிக்கப்பட்டதா.பதிவாளர் விளக்கம் தர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தீர்வுகாண வேண்டும் என்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews