மீண்டும் பள்ளிக்கு போகலாம்! பொதுத்தேர்வை தைரியமாக சந்திக்க இன்று முதல் பாடம்:கவுன்சிலிங்கும் உண்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 19, 2021

Comments:0

மீண்டும் பள்ளிக்கு போகலாம்! பொதுத்தேர்வை தைரியமாக சந்திக்க இன்று முதல் பாடம்:கவுன்சிலிங்கும் உண்டு

தமிழகம் முழுக்க, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும், இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய, அதிகாரிகள் குழு, பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், ஒன்பது மாதங்களுக்கு பிறகு, இன்று திறக்கப்படுகிறது. பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், கற்பித்தல் பணிகள் துவங்கப்படுகின்றன. நீண்ட இழுபறிக்கு பின், 35 சதவீத குறைக்கப்பட்ட சிலபஸ் வெளியிடப்பட்டுள்ளது.அதிகாரிகள் ஆய்வுஇன்று மாணவர்கள் வரத்துவங்குவதால், நேற்று முழுக்க, அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் வகுப்பறைகள், கழிவறைகள், வளாகம் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. துாய்மைப்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் சேதுராமவர்மா தலைமையில், கோவை மாவட்ட பள்ளிகளில், ஆய்வு பணிகள் நடக்கின்றன.மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் குழுவாக பிரிக்கப்பட்டு, அனைத்து பள்ளிகளையும் மேற்பார்வையிடுகின்றனர். இன்று பள்ளிக்கு வரும்போது, பெற்றோரின் ஒப்புதல் படிவம், அனைத்து மாணவர்களிடமும் பெறப்படுகிறது. உடல் வெப்பநிலை சரிபார்த்து பிறகு வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவர். சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில், அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இன்று முதல் மருத்துவ முகாம் நடத்தப்படும். இம்முகாமில், தொற்றில் இருந்து தற்காத்து கொள்ளும் முறை குறித்து விளக்கப்படும்.ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளதால், கால அட்டவணை தயாரிக்கப்பட்டு, ஆசிரியர்கள் கையாள வேண்டிய பாட அட்டவணையும் உருவாக்கப்பட்டுள்ளது.கவுன்சிலிங்கிற்கு முக்கியத்துவம்முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறுகையில், ''அரசின் அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளும் பின்பற்றுவதை உறுதி செய்ய, குழு அமைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட சிலபஸ்க்கு ஏற்ப, பாட அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி பள்ளிக்கு வரலாம். வருகைப்பதிவு கட்டாயமில்லை. ஆன்லைன் முறையிலும், கற்பிக்கும் நடைமுறை தொடரும். மூன்று நாட்களுக்கு, பொதுத்தேர்வு குறித்த பயம், பதற்றத்தில் இருந்து விடுவிக்க, மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார். 'ஆய்வுப்பணிகள் தொடரும்'கோவையில் உள்ள பள்ளிகளில், மூன்று நாட்கள் ஆய்வு செய்யவுள்ளேன். அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளனவா, அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என அறிய, ஆய்வுப்பணி தொடரும்.-சேதுராமவர்மா உறுப்பினர் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews