13 பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வு கால அட்டவணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 06, 2020

Comments:0

13 பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வு கால அட்டவணை வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
13 பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் நடப்பு செமஸ்டருக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடக்க இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது. இறுதி செமஸ்டர் தேர்வை தவிர, மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வை எழுத இருந்த மாணவர்களுக்கு முந்தைய செமஸ்டர் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், உள் மதிப்பீடு அடிப்படையிலும் தேர்ச்சி வழங்கப்பட்டன. இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. கொரோனா காரணமாக கல்லூரிகள் திறப்பு தாமதமாகி வந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் நடப்பு செமஸ்டருக்கான வகுப்புகள் ஆன்லைனில் நடத்த கல்லூரி நிர்வாகங்கள் முடிவு செய்து அதன்படி வகுப்புகள் நடத்தப்பட்டு நடப்பு செமஸ்டருக்கான பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையில் கலை, அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங், வேளாண், மீன்வளம், கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அதற்கான வழிகாட்டு நெறிமுறை களையும் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு நடப்பு செமஸ்டருக்கான தேர்வு கால அட்டவணையை தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்கள் உயர் கல்வித் துறையிடம் சமர்ப்பித்து இருக்கிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் உயர் கல்வித் துறையிடம் தாங்கள் சமர்ப்பித்து இருக்கும் தேர்வு கால அட்டவணை விவரம் வருமாறு:- அண்ணா பல்கலைக்கழகம் - 2.1.2021 முதல் 20.1.2021 வரை, அண்ணாமலை பல்கலைக்கழகம் - 10.12.2020 முதல் 26.12.2020 வரை, அழகப்பா பல்கலைக்கழகம் - 12.12.2020 முதல் 20.12.2020 வரை, பாரதியார் பல்கலைக்கழகம் - 23.12.2020 முதல் 31.12.2020 வரை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் - 9.12.2020 முதல் 24.12.2020 வரை, சென்னை பல்கலைக்கழகம் - 21.12.2020 முதல் 6.1.2021 வரை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் - 14.12.2020 முதல் 31.12.2020 வரை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - 14.12.2020 முதல் 31.12.2020 வரை, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் - 16.12.2020 முதல் 23.12.2020 வரை, பெரியார் பல்கலைக்கழகம் - 21.12.2020 முதல் 31.12.2020 வரை, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் - 14.12.2020 முதல் (அனைத்து தேர்வுகளையும் முடிக்க 23 வேலை நாட்கள் தேவை), தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் - 17.12.2020 முதல் 31.12.2020 வரை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் - 16.12.2020 முதல் 31.12.2020 வரை. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews