அரசு பள்ளி மாணவர்களுக்கு JEE மற்றும் IIT பயிற்சி வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 17, 2020

Comments:0

அரசு பள்ளி மாணவர்களுக்கு JEE மற்றும் IIT பயிற்சி வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பிரிவு ( 11 மற்றும் 12 - ஆம் வகுப்பு ) பயிலும் மாணவர்கள் தேசிய அளவில் தேசிய தேர்வு முகமையால் ( National Testing Agency ) நடத்தப்பட்டு வரும் ஐ.ஐ.டி மற்றும் ஜே.இ.இ ( IITand JEE ) போட்டித் தேர்வுகளில் கலந்துக்கொண்டு இந்திய தொழில்நுட்பக் கழக கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர்கல்வி பயிலுவதற்கு ஏதுவாக டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் M / s.Nextgen Vidhya Pvt . Ltd. , நிறுவனத்துடன் பார்வையில் கண்டுள்ளவாறு துறையால் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பொருள் குறித்து கீழ்க்கண்ட விவரங்களை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குத் தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இந்நிறுவனம் , தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ , மாணவியர் , தொழில்நுட்பக்கல்வி சார்ந்த IIT / JEE உயர்கல்விக்கான போட்டித் தேர்வினை உறுதியுடன் எதிர்கொள்ளும் வண்ணம் தயார்படுத்தும் வகையில் இணையதளம் மன வாயிலாக பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது. இப்பயிற்சி கணிதம் , இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் வழங்கப்படும். மேலும் , இப்பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது . மாணவர்களிடமோ , அவர்களது பெற்றோரிடமோ இப்பயிற்சிக்கென எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களைப் பயிற்சி நடைபெறும்போதே கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ , மாணவியருக்கு தனித்தனியே Login ID மற்றும் Password வழங்கப்படும் . மேலும் பள்ளி ஆசிரியர் , பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பள்ளித்தலைமையாசிரியர் ஆகியோருக்கும் மாணவர்கள் பயிற்சி பெறுவதைக் கண்காணிக்கும் வகையில் Login ID மற்றும் Password வழங்கப்படும். இப்பயிற்சியினை மாணவர்கள் பெறுவதைக் கண்காணிக்கும் வகையில் தொடர்புடைய பள்ளிகளில் மேற்கண்ட பாடங்களைப் போதிக்கும் முதுகலை ஆசிரியர் ஒருவரை பொறுப்பாளராக நியமனம் செய்தல் வேண்டும். மேலும் இப்பயிற்சிக்கான இணையதளம் வாயிலான பதிவு 21.12.2020 முதல் 31.12.2020 வரை நடைபெறும். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 04.01.2021 முதல் தொடங்கும். இப்பயிற்சி நடைபெறும் நேரம் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கான கூட்டம் குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். இப்பயிற்சியினைப் பெற விரும்பும் மாணவர்கள் கீழ்க்கண்ட இணையதள முகவரியில் விவரங்களைப் பதிவு செய்தல் வேண்டும் . https://play.google.com/store/apps/details?id=com.vidhyaeduation.android இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ , மாணவியரின் விவரங்களைக் கீழ்க்கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து இப்பயிற்சிக்கான பொறுப்பாளர் மற்றும் சென்னை முதன்மைக்கல்வி அலுவலரின் இணையதள முகவரிக்கு ( ceochn@nic.in ) அனுப்புதல் வேண்டும். IIT and JEE Free Coaching Instructions - Download here... 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews