"தேசிய அளவிலான மருத்துவக் கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள் மீண்டும் தமிழகத்துக்கு ஒப்படைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 10, 2020

Comments:0

"தேசிய அளவிலான மருத்துவக் கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள் மீண்டும் தமிழகத்துக்கு ஒப்படைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிப்பு 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் கூடுதல் இடங்களுக்கு நாளை முதல் 14ம் தேதி வரை மீண்டும் மருத்துவ கலந்தாய்வு; அகில இந்திய VIII ஒதுக்கீட்டிலிருந்து 161 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு திரும்பின

தேசிய அளவிலான மருத்துவக் கலந்தாய்வில் உள்ள 132 எம்பிபிஎஸ் மற்றும் 19 பல்மருத்துவப் படிப்புக்கான இடங்கள் தமிழ்நாட்டிற்குத் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தேசிய அளவிலான கலந்தாய்வுக்கு 626 எம்பிபிஎஸ் இடங்களும், பல்மருத்துவப் படிப்பில் 29 இடங்களும் ஒதுக்கப்பட்டன. இதில் தேசிய அளவிலான கலந்தாய்வில் நிரப்பப்படாமல் 132 எம்பிபிஎஸ் இடங்களும் 19 பல்மருத்துவப் படிப்பு இடங்களும் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அரசு பள்ளியில் பயின்றோருக்கான ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் அதிகம் எனச் சேராமல் போன மாணவர்களுக்குத் தேசிய அளவிலான இடங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டால் வழங்குவதாகத் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்தது குறிப்பிடத் தக்கது.

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews