17ம்தேதி பிராக்டிக்கல் வகுப்பு அண்ணா பல்கலை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 10, 2020

Comments:0

17ம்தேதி பிராக்டிக்கல் வகுப்பு அண்ணா பல்கலை அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் படிக்கும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் 17ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடக்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இந்த செய்முறைத் தேர்வுகள் ஆன்லைன் வழியில் 3 மணி நேரம் நடக்கும். செய்முறைத் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடப்பதால் அதற்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், ஆன்லைன் செய்முறைத் தேர்வுக்கு பொருத்தமான தளங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆன்லைன் தேர்வுகளை அந்தந்த கல்லூரிகள் நடத்த வேண்டும். ஆய்வக பாடத்திட்டத்தின் அடிப்படையில் புற மதீப்பீட்டு கேள்விகள் கேப்கப்படும். கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற மூல தளத்தை பயன்படுத்தி சோதனை நடத்தலாம். செய்முறைத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்க ஏ4 தாள்களை பயன்படுத்த வேண்டும். தேர்வு எழுதி முடித்த பிறகு அந்த நகலை சம்பந்தப்பட் தேர்வு நடத்தும் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு நடத்துவோர் அந்த நகல்களை மண்டல அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும். செய்முறைத் தேர்வு நடக்கும் மையங்களுக்கு பறக்கும் படையினர் வந்தால் அவர்களை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 17 வழி காட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews