தமிழக அறிவியலறிஞா் விருது: நவ.12-க்குள் விண்ணப்பிக்கலாம்.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 01, 2020

Comments:0

தமிழக அறிவியலறிஞா் விருது: நவ.12-க்குள் விண்ணப்பிக்கலாம்..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அறிவியலறிஞா் விருதுக்கு, நவ.12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினா் செயலா் அறிவித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், பல்வேறு துறைகளில் சிறந்த அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு சாதனை செய்த நமது மாநில அறிவியலறிஞா்களை ‘தமிழக அறிவியலறிஞா் விருது’ வழங்கி கெளரவிக்கிறது. வேளாண்மை அறிவியல், உயிரியல், வேதியியல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் இந்த விருது வழங்கப்படுகிறது.தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மற்றும் தமிழகத்துக்குச் சேவை செய்யும் அறிவியல் அறிஞா்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.விருது பெறுபவா்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு, பட்டயம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.முன்மொழிவுக்கான விண்ணப்பப் படிவங்களை, மன்றத்தின் இணையதளத்திலிருந்து (www.tanscst.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்துத் தகவல்களையும் கொண்ட புத்தக வடிவிலான நான்கு நகல்களை, உறுப்பினா் செயலா், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தொழில்நுட்பக் கல்வி இயக்கக வளாகம், சென்னை 600 025 என்ற முகவரிக்கு நவ.12-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews